Wednesday, February 8, 2012
மடாலய பக்தர்களின் அனுபவங்களும், அற்புதங்களும்
மடாலய பக்தர்களின் அனுபவங்களும், அற்புதங்களும்
என் மகள் சாந்திக்கு திருமண வயதாகியும் திருமணம்
ஆகவில்லை. மூன்று வருடமாக வரன் பார்த்துக் கொண்டிருந்தாலும், திருமணம் ஏனோ தகையவில்லை.
பிறகு பாம்பன் சுவாமி கோயிலுக்கு வந்து வேண்டிக் கொண்டேன். அங்குள்ளவர்கள்
கோரிக்கை அட்டை வைக்கச் சொன்னார்கள். கோரிக்கை வைத்த மூன்று வாரத்திலேயே ஒரு வரன்
வந்து திருமணமும் ஆகிவிட்டது.
திருமணம் நடைபெற்றும், குழந்தை பாக்கியம் இல்லாத
குறை இருந்தது. அதற்கும் கோரிக்கை
அட்டை வைத்து பிரார்த்தனை செய்த நான்கு வாரத்திலேயே குழந்தை பாக்கியம்
ஊர்ஜிதமாகியது.
அப்புறம் மற்றொரு மகளுக்கு (T.விஜயலெட்சுமி M.A., B.Ed ) எல்லாமே பாம்பன்
சுவாமிகள்தான். நமது சுவாமிகளை சந்தித்தப் பிறகுதான் அவள் வாழ்க்கையே நன்றாக
இருக்கிறது. சுவாமிகளிடம் ‘ அது வேணும் இது வேணும்’ என்று கேட்காமல் எல்லாமே
நீங்கதான் என்று அவரிடமே ஒப்படைத்து விட்டால் அவர் நமக்கு என்ன வேண்டுமோ அதை
அவ்வப்போது அவர் செய்வார். அவருடைய மகிமையை வாயால் சொல்ல இயலாது அவ்வளவு அற்புதம்
ஒவ்வொரு நாளும் நிகழ்த்திக் கொண்டே இருக்கிறார்.
என் மகள் விஜயலெட்சுமி B.Ed சேர்ந்தாள். “நடத்துவது எப்படின்னு தெரியலையே
அம்மா” அப்படின்னு பயந்து கொண்டே இருந்தாள். தெரிந்திருந்தாலும் நடத்தும்போது
பயமாக இருக்கிறது சரியாக நடத்த முடியவில்லை என்று அடிக்கடி சுவாமிகளிடம் சொல்லிக்
கொண்டே இருப்பாள். Practical Exam வந்தது. நடத்தவே
தெரியவில்லை என்று சொன்னவள் Practical
Exam அன்று
சரியாக நடத்தியிருக்கிறாள். அதிலும் அவள் இருந்த வகுப்பிலே எல்லோரும் தமிழில்தான்
நடத்தினார்களாம்.ஆனால் இவள் மட்டும் ஆங்கிலத்திலே நடத்தினதாகச் சொன்னாள்.
ஏனென்றால் அவள் B.Ed., English subject என்று மிக பயந்து இருந்தாள். தான் சரியாக
நடத்துவோமா இல்லையா என்ற நிலையில் இருந்த என் மகளுக்கு பாம்பன் சுவாமிகள்தான்
இப்படி ஒரு அற்புதத்தை நிகழ்த்தினார் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.
இது போல நிறைய இருக்கிறது. B.Ed.,
முடித்த பிறகு சுவாமிகளிடம் நீங்கள்தான் ஒரு
நல்ல வேலையை கொடுக்க வேண்டும் என்று வேண்டுதல் வைத்தாள். அதேபோல ஒரு வேலையும் அவர்
கொடுத்திருக்கிறார்.
நமது முயற்சியும்,சுவாமிகளின் குருவருளின் உறுதுணையும் இருந்தால்
வாழ்வில் பல சாதனைகளை சாதிக்கலாம்.
நமது முயற்சியும்,சுவாமிகளின் குருவருளின் உறுதுணையும் இருந்தால்
வாழ்வில் பல சாதனைகளை சாதிக்கலாம்.
உண்மையுடன்
Cell: +91 9865483828
Subscribe to:
Posts (Atom)